சென்னை, டிச. 28-சென்னை அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பேசின் பிரிட்ஜ், வியாசர் பாடி ஜீவா, பெரம்பூர், கேரேஜ் ஒர்க்ஸ், லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம், கொரட்டூர், பட்டரை வாக்கம், அம்பத்தூர், திருமுல்லைவாயல், அன் னணூர், ஆவடி, இந்துக் கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங் கள் உள்ளன. பேசின் பிரிட்ஜ் முதல் பட்டாபிராம் வரை ரயில் நிலையங்களை ஒட்டி ரயில்வே கேட்கள், நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலோர் நடை மேம்பாலத்தை பயன்படுத்துவது கிடை யாது. ரயில் நிலையம் அருகில் மூடிக்கிடக்கும் கேட்டில்
நுழைந்து, தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். அப்படிச் செல்லும் போது ரயில் மோதி பலர் உயிரிழக் கின்றனர்.கடந்த ஜனவரி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை பேசின் பிரிட்ஜ் முதல் பட்டாபிராம் ரயில் நிலையம் வரையுள்ள தண்டவாள பகுதிகளில் 209 பேர் ரயில் மோதி இறந்துள்ளனர்.
ரயில் விபத்தில் உயிரிழப்பை தடுக்க ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் அடிக்கடி விழிப்புணர்வு கூட்டங் கள் நடத்துவதுடன், விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும், பய ணிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக