வியாழன், டிசம்பர் 22, 2011

2ஜி வழக்கு: கொல்ல முயற்சி நடப்பதாக ஆ.ராசா உதவியாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு கதறினார் !

தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக 2ஜி வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு கதறினார். முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல் தனிச் செயலராக பணியாற்றிய ஆசிர்வாதம் ஆச்சாரி 2ஜி ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். 


இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான ஆச்சாரி, தன்னைக் கொல்ல யாரோ ஒருவர் முயற்சி செய்வதாகவும், தன்னைப் பின்தொடருவதாகவும் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கதறி அழுதபடி கூறினார். 

தன்னை மிரட்டிய நபர் நீதிமன்றத்தில் இருந்து சற்றுமுன்னர்தான் வெளியேறியதாகவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் கூறிய நபரை டெல்லி போலீசார் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே பிடித்து நீதிபதி சைனி முன்பு ஆஜர்படுத்தினர்.

அவர் பெயர் ஜெய்ப்ரகாஷ் என அடையாளம் காணப்பட்டது. எனினும் தனக்கு ஆச்சாரியை தெரியாது என்றும், தான் அப்பாவி என்றும் அவர் கூறினார்.

எனினும் சில தினங்களுக்கு முன் தனது வீட்டிற்குள் நுழைய முயற்சித்தவர் ஜெய்ப்ரகாஷ்தான் என தனது பாதுகாவலர் அடையாளம் காட்டியுள்ளார் என ஆச்சாரி கூறினார்.

ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சந்தோலியாவுடன் ஜெய்ப்ரகாஷ் இன்று காலை நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார் என்றும் நீதிபதியிடம் ஆச்சாரி கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக