வெள்ளி, டிசம்பர் 23, 2011

அமெரிக்‌க நிறுவனத்தில் உளவு வேலை பார்த்த குற்றத்திற்காக சீன நாட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை


அமெரிக்‌க நிறுவனத்தில் உளவு வேலை பார்த்ததாக சீன நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த விவசாய நிறுவனம் ஒன்றில் சீனாவை சேர்ந்த ஹூவாங்ஹெச்யூ(46) என்பவர் பணிபரிந்து வந்தார்.இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை மேற்கண்ட நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கால கட்டத்தில்
அந்நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை சீன நிறுவனத்திற்கு அளித்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும் ஜேர்மன் நாட்டிற்கும் ரகசியங்களை விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.இது குறித்து விசாரணை நடத்திய இண்டியானா பகுதியை சேர்ந்த நீதிபதி வில்லியம் லாரன்ஸ் இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஹூவாங் ஏற்கனவே இது போன்ற வழக்கு ஒன்றிற்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே ஆண்‌டில் சீன பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவின் போர்டு நிறுவனத்தின் ரகசியங்களை சீனாவை சேர்ந்த கார் தயாரிப்பாளர் ஒருவருக்கு கடத்தியதாகவும், 2010ம் ஆண்டில் அமெரிக்‌காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரகசியங்களை கடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக