சனி, டிசம்பர் 24, 2011

சிக்கினார் சாமி : நிதிமோசடி வழக்கில் சுப்பிரமணிய சாமிக்குப் பிடியாணை


நிதிமோசடி வழக்கில் சுப்பிரமணிய சாமிக்கு பிடியாணைநிதிமோசடி வழக்கில் ஜனதா கட்சி தலைவரான சுப்ரமணிய சாமிக்கு நுகர்வோர் ஆணையம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கடந்த 1986-ஆம் ஆண்டு தலைவராக இருந்த கம்பெனியில், வி.என்.நாராயணன் என்பவர் 3 ஆண்டு டெபாசிட் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ததாகவும், ஆனால் முதிர்வடைந்தும் அப்பணத்தைச் சுப்பிரமணியசாமி
திருப்பித்தரவில்லை என்றும் கேரள மாநிலம் திருச்சூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் பத்மினி சதீஷ், ரூ.10 ஆயிரத்தை 9% வட்டியுடன் சுப்பிரமணிய சாமி திருப்பி தருமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். எனினும் பணத்தைச் சுப்பிரமணிய சாமி தரவில்லை என்று நாராயணன் மீண்டும் புகார் கூறினார்.

இதனால், சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கைது வாரண்டை நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ளது. அவரைக் கைது செய்து, ஏப்ரல் 2-ந் தேதிக்கு முன்பு, நுகர்வோர் ஆணையத்தில் ஆஜர் படுத்துமாறு டெல்லி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. சுப்ரமணியசாமிக்கு எதிரான பிடிவாரண்டு ஆணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக