செவ்வாய், டிசம்பர் 27, 2011

பிரதமர் வருகையால் முஸ்லிம்கள் தொழ தடை : இந்திய தவ்ஹித் ஜமாஅத் கடும் கண்டனம்


தொழ சென்ற முஸ்லிம்களை தொழ அனுமதிக்காமல் தடுத்து  நிறுத்திய அரசுக்கு எதிராக, இந்திய தௌஹீது ஜமாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இ.த.ஜ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:

"சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவன் என்று அழைக்கப் படும் கவர்னர் மாளிகை வளாகத்தில் மக்களின் வழிபாட்டிற்காக கோயிலும், பள்ளிவாசலும் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், 25.12.2011 ஞாயிறன்று கவர்னர் மாளிகையில் தங்கினார். இதனைக் காரணம் காட்டி பாதுகாப்புப் படையினர் ராஜ்பவனில் உள்ள பள்ளிவாசலில், முஸ்லிம்களை ஐந்து வேளை தொழுகைக்கும் அனுமதிக்காமல் தொழச்சென்றவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்திய அரசியல் சாசனம், இந்தியாவில் வாழும் அனைத்து மதத்தினரும் தங்கள் தலங்களில் வழிபாடு நடத்திக் கொள்ள அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது.

ஆனால் அதனை மீறும் வகையில், முஸ்லிம்களை மட்டும் தொழ அனுமதிக்காமல் தடை விதித்தது கண்டனத்துக்குறியதாகும். முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தடுத்திருப்பது அரசின் ஒரு சார்பு நிலையை காட்டுகிறது. முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் அரசின் போக்கை இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வரும் காலங்களில் இது தொடருமேயானால் பெரும் போராட்டங்களை நடத்த நேரிடும்"
என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக