வியாழன், டிசம்பர் 22, 2011

சோனியாவை விவாதத்திற்கு அழைக்கும் ஹசாரே!

ராலேகான் சித்தி: இன்று மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதா உறுதியானது என்று கூறும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, மசோதா தொடர்பாக விவாதம் செய்ய வருமாறு ஹசாரே சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி.பி.ஐ., உள்ளடக்காத லோக்பால் மசோதா பயனற்றது என்றும்
, மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள லோக்பால் மசோதாவால், எந்தவொரு பயனும் கிடைக்கப் போவதில்லை. லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ., நிச்சயமாக கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அவரும் அவரது குழுவினரும் உறுதியாக இருப்பதாக கூறினார்.

மேலும், அவ்வாறு இல்லாத மசோதாவை தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள லோக்பால் மசோதா வலுவானது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார். அவ்வாறிருக்க, அதுகுறித்த விவாதத்தில் எங்களுடன் பங்கேற்க மத்திய தயங்குவது ஏன் அவர் சோனியாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். சோனியா இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் ஹசாரே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக