ஞாயிறு, மே 18, 2014

1AZAM Malaysia திட்டத்தின் மூலம் 140,296 சிறு வணிகர்கள் உருவாக்கம்- பிரதமர்

அரசாங்கம் மேற்கொண்டு வரும் 1AZAM Malaysia திட்டத்தின் வழி கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 140,296 சிறுதொழில் வணிகர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் மட்டும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட திட்டத்திற்காக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதுடன் அதற்கான பயிற்சி திட்டத்தையும் வழங்கியுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன்  ரசாக் தெரிவித்துள்ளார்.
1AZAM திட்டமானது, குறைந்த மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதற்குச் சான்றாக இத்திட்டத்தில் பங்கேற்ற சிலர் ஒரு நாளைக்கு 90 ரிங்கிட் வரை கூட வருமானம் பெற்றுள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இத்திட்டத்தின் வழி சென்டோல், பர்கர், கேக் விற்பது போன்ற வியாபாரத்துறையில் குறைந்த வருமானம் உள்ளவர்கள் ஈடுபடமுடிகிறது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக