செவ்வாய், மே 06, 2014

பாஜக அரசு அமைந்தாலும் சேர மாட்டேன்: ஜஸ்வந்த் சிங் திட்டவட்டம்

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்தாலும் அக்கட்சி யில் மீண்டும் சேரமாட்டேன் என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நிதித்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர் ஜஸ்வந்த் சிங். கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவராக இருந்த இவர் விரும்பியபடி, ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிட சீட் தரப்படவில்லை. இதனால், பாஜக-வுக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கினார்.

இதையடுத்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஜஸ்வந்த் சிங் அளித்த பேட்டி:
தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தாலும் நான் அக் கட்சியில் சேர மாட்டேன். வாஜ் பாய் தலைமையிலான ஆட்சியில் பதவி வகித்த கவுரவம் எனக்கு உண்டு. அந்த ஆட்சியைப் போல் புதிதாக அமையும் ஆட்சி இருக்காது. பார்மர் தொகுதியில் வெற்றி பெற்றால் சுயேச்சையாகவே நீடிப்பேன்.

மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் அது எப்படி இருக்கும் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தனிப்பட்ட நபர்களை நான் பேச விரும் பவில்லை. தற்போது பாஜக தனிநபர் மற்றும் அவரைச் சுற்றி யுள்ள கூட்டத்தின் ஆதிக்கத் தில் இயங்கி வருகிறது. இது, இயற்கையாக நடந்தது அல்ல; கட்சியே தேடிக் கொண்டது.

எனக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குமே காரணம். நான் 67-ம் ஆண்டு முதல் 12 பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளேன். ஆனால், இந்தத் தேர்தல் தான் சவால் மிகுந்தது. ராஜஸ்தான் எம்.எல்.ஏ.வாக உள்ள என் மகன் மன்வேந்திராவை கட்சியில் இருந்து நீக்கி இருப்பது அநீதி யான செயல் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக