சனி, மே 03, 2014

எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் ஆதரவாளர்கள் 102 பேருக்கு சிறைத்தண்டனை

எகிப்தில் பதவியிறக்கப்பட்ட அதிபர் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் 102 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அதிபர் முஹம்மது மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது ஆதரவாளர்களும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . அவர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 

ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நீதிக்கு ஒவ்வாத அதிவேக விசாரணைவிசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 529 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் 683 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. 

இந்நிலையில், ஜூலை மாதம் நடந்த மோதல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த 102 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு இன்று தலா 10 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. மேலும் சகோதரத்துவ இயக்க ஆதரவாளர்கள் 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. எகிப்தில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக