நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்க இன்னும் சில தினங்களே மீதமுள்ள நிலையில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி அதிகாரிகளை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ அனுமதி கோரியுள்ளது.
ஐ.பி சிறப்பு இயக்குநரான ராஜேந்தர் குமார் மற்றும் 3 ஐ.பி அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளது. பா.ஜ.க அதிகாரப்பூர்வமாக அரசு அமைத்துவிட்டால் அனுமதி கிடைப்பது எளிதல்ல என்பதை உணர்ந்து சி.பி.ஐ வேகமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதேவேளையில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராஜேந்தர் குமாரும் இதர அதிகாரிகளும் உளப்பூர்வமாக கடமையை நிறைவேற்றியவர்கள் என்று பா.ஜ.க கூறி வருகிறது.நரேந்திரமோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மீது இவ்வழக்கில் குற்றச்சாட்டு எழுந்தபோதிலும் அவர்களிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக