12 ஆண்டுகளுக்குப் பிறகு தோமஸ் கிண்ண பூப்பந்தாட்டத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மலேசிய அணி. இதன் மூலம், தோமஸ் கிண்ணத்தை மீண்டும் நெருங்கியுள்ளது மலேசியா.இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி, சிரி ஃபோர்ட் அரங்கத்தில் ஜப்பானுடன் இறுதிச் சுற்றில் களமிறங்கவிருக்கிறது மலேசியா.
இதற்கு முன்னர் கடந்த 2002-ஆம் ஆண்டு, சீனா குவாங்சாவில் நடைபெற்ற தோமஸ் கிண்ண பூப்பந்தாட்டத்தில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது மலேசியா எனினும் 2-3 என்ற புள்ளிகளில் இந்தோனேசியாவிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் டத்தோ லீ சொங் வெய் இந்தோனேசியாவின் தோம்மி சுகியார்தோவை 21-19,21-13 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். அதேவேளையில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் மலேசியா விளையாட்டாளர்களான தான் புங் ஹியோங்/ ஹூன் தியன் ஹாவ் ஆகியோர் உலகின் முன்னணி ஆட்டக்காரர்களான முகமது ஆஹ்சான்/ஹென்ட்ரா செத்தியாவான் ஆகியோரை 21-19,8-21,32-21 என்ற புள்ளிகளில் வீழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக