சனி, மே 24, 2014

தாவூத் இப்ராகிமையும் நவாஸ் ஷெரிப் அழைத்து வருவாரா?: காங். கிண்டல்

நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டிருப்பது தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருப்பதைப் போல், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் ஒருசாரரிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் தற்போதையை நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. தேர்தல் பிரசார காலத்தில் பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஏகப்பட்ட ஓசையை கிளப்பிவந்த பா.ஜ.க. இப்போது தனது குரலை மாற்றிக் கொண்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

இது தொடர்பாக, கருத்து கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெ.பி.அகர்வால், ‘தனது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை அழைத்த மோடி, அவர் வரும்போது தாவூத் இப்ராகிம் மற்றும் இந்திய வீரர்களின் தலைகளை துண்டித்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் உடன் அழைத்து வரும்படி கூறியிருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக