புதன், மே 07, 2014

மாட்ரிட் டென்னிசில் பெடரர் விலகல்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இந்தபோட்டியில் பங்கேற்பதாக இருந்த சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் கடைசி நேரத்தில் விலகி விட்டார். அவரது மனைவி மிர்கா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். 

இன்னும் சில தினங்களில் அவருக்கு 3-வது குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வசதியாக மாட்ரிட் போட்டியில் இருந்து பின்வாங்கி இருக்கிறார். 

இதனால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், அடுத்த ஆண்டு அங்கு சென்று மீண்டும் விளையாட முடியும் என்று நம்புவதாகவும் பெடரர், பேஸ்புக் வலைதளத்தில் எழுதியுள்ளார். பெடரர்-மிர்கா தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக