வியாழன், மே 15, 2014

சிறுமியிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இருந்து பாதிரியார் வெளியேற்றம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ சார்லஸ் கோப்பாலா(48). அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிவந்த இவர், 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதற்காக கடந்த 8-6-2013 அன்று கைது செய்யப்பட்டார்.

பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர் மீது நடைபெற்ற வழக்கில் ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த அவரை அமெரிக்க குடியுரிமை (அகற்றல்) துறை அதிகாரிகள் பிடித்து, இந்தியாவுக்கு செல்லும் விமானத்தில் ஏற்றி நாட்டை விட்டு வெளியேற்றினர்.

டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர் நேற்று ஒப்படைக்கப்பட்டதாக அறிவித்துள்ள அமெரிக்க குடியுரிமை துறை இயக்குனர், ‘கத்தோலிக்க தேவாலயத்திலும், கத்தோலிக்க சமுதாயத்திலும் மதிப்புமிக்க, நம்பிக்கைக்குரிய பதவி வகித்த லியோ சார்லஸ், அந்த நம்பிக்கையை தகர்த்து விட்டார். 

அமெரிக்காவில் இருந்து அவர் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாரின் மனக் காயங்களுக்கு ஓரளவிற்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக