வெள்ளி, மே 30, 2014

தெலுங்கானாவில் புதிய ஆட்சி: சந்திரசேகர ராவுக்கு கவர்னர் அழைப்பு

ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு நாட்டின் 29–வது மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

கடந்த 18–ந் தேதி நடந்த கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல் மந்திரியாக சந்திரசேகரராவ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த நிலையில் சந்திர சேகரராவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் நரசிம்மன் நேற்று அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து சந்திர சேகரராவ் வருகிற 2–ந் தேதி (திங்கட்கிழமை) தெலுங் கானா முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் 2–ந் தேதி காலை 8.15 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது.சந்திரசேகரராவுடன் 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் எனத் தெரிகிறது.

மந்திரி சபையில் கட்சியின் மூத்த தலைவர் ராஜேந்தர், ஜுப்பல்லி கிருஷ்ணாராவ், சந்திரசேகரராவ் மகன் தாரகாராமராவ், மருமகன் ஹரிஸ்ராவ் ஆகியோர் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரசேகரராவ் முதல்–மந்திரியாக பதவி ஏற்றதும் தெலுங்கானாவில் தற்போது இருக்கும் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக