திங்கள், மே 19, 2014

ஹுடுட் பற்றி பேசுவதற்கு ராம் கர்பாலுக்கு உரிமை இல்லை-சுயேட்சை வேட்பாளர்

ஜ.செ.க சார்பில் ஹுடுட் சட்டம் பற்றி பேசுவதற்கு ராம் கர்பால் சிங்கிற்கு எவ்வித உரிமையும் கிடையாது என புக்கிட் குளுகோர் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலின் சுயேட்சை வேட்பாளர் முகமது நபி புக்ஸ் முகமது நபி அப்துல் சாதார் தெரிவித்துள்ளார்.
இங்கு தாமான் துன் சார்டோன், குளுகோரில் செய்தியாளர்களிடம் பேசிய முகமது நபி, ராம் கர்பாலுக்கு ஜ.செ.க-வில் எந்த பதவியும் இல்லை. அதேவேளையில் அவர் அக்கட்சியில் எவ்வளவு காலம் சேவை புரிந்துள்ளார் என்பதும் சந்தேகத்திற்குரியது என தெரிவித்தார்.
முன்னதாக ராம் கர்பால், தமது தந்தை மறைந்த கர்பால் சிங் போலவே தாமும் ஹுடுட் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவிருப்பதாக கூறியிருந்தது தொடர்பாக கருத்துரைக்கையில் முகமது நபி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் கிளந்தானில் ஹுடுட் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங்கும் தனது பினாங்கு மாநில அரசியல் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு ரகசியமான முறையில் ஆதரவு தெரிவித்து வருவதாக முகமது நபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் லிம் குவான் எங் ஹுடுட் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தாலும், பின்னர் பாஸ் கட்சியினரின் மனதில் இடம்பிடிப்பதற்காக ரகசியமான முறையில் அச்சட்ட அமலாக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக