புதன், மே 07, 2014

நாடாளுமன்றத்துக்கான 8 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இது வரை 7 கட்டங்களில் 438 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
தற்போது 8 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 தொகுதிகளுக்கும், பீகாரில் 7 தொகுதிகளுக்கும், இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகளுக்கும், உ.பி.யில் 15 தொகுதிகளுக்கும், உத்தரகாண்டில் 5 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

இன்றைய தேர்தலில் காங்கிரஸ் துணை தலைவரான ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியிலும் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக