சனி, மே 10, 2014

கிரீஸில் தலையை மறைத்து அன்னா தேர்தலில் போட்டியிடுகிறார்!

’முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சத்தை தடுக்கவேண்டும்.கிரீஸில் அனைத்து முஸ்லிம்களுக்கும் பிறரைப் போலவே உரிமைகள் வழங்கவேண்டும்’-
ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் கிரீஸுக்கான இடத்திற்காக போட்டியிடும் முஸ்லிம் பெண்மணி அன்னா ஸ்டாமோயு தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன்னால் வைக்கும் கோரிக்கையாகும்.ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலையை மறைத்த உறுப்பினராக தான் இருப்பேன் என்று அன்னா கூறுகிறார்.இம்மாதம் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அன்னாவின் கணவர் எகிப்தியர்.தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளூர் விவகாரங்களை மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ஐரோப்பா தலையிடவேண்டிய விஷயங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.இக்கோ கிரீன் என்ற கட்சியின் வேட்பாளராக கிரீஸ் பிரதிநிதி தேர்தலில் அன்னா போட்டியிடுகிறார்.
பழமைவாத கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அன்னா, சிறுவயது முதலே தனது உள்ளத்தில் எழுந்த கேள்விகளுக்கு விடைதேடியபோது இஸ்லாத்தைக் குறித்து படித்தார்.பின்னர் முஸ்லிமானார்.
பிசினஸ் மேனேஜ்மெண்டில் பட்டம்பெற்றுள்ள அன்னா, யோகா ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இக்காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல், மனித உரிமை விவகாரங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவைப் பெற்றார்.30-வயதில் அவர் இஸ்லாத்தை தழுவினார்.
எல்லா முஸ்லிம்களும் தேர்தலில் பங்கேற்று உரிமைகளைக் குறித்து விழிப்புணர்வு அடையவேண்டும் என்று அன்னா கூறுகிறார்.ஏதன்ஸில் தொழுகைக்கான மஸ்ஜித் ஒன்றைக் கட்டவேண்டும் என்பது அன்னாவின் விருப்பம்.ஐரோப்பாவில் மஸ்ஜித் இல்லாத ஒரே தலைநகரம் ஏதன்ஸ்.ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கிரீஸுக்கு 21 இடங்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக