திங்கள், மே 19, 2014

கலவரம் எதிரொலி: வியட்நாமில் இருந்து வெளியேறும் சீனர்கள்

தெற்கு சீன கடலில் பராசல் தீவுகள் உள்ளன. தற்போது அது சீன கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு வியட்நாமும், தைவானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இப்பிரச்சினை காரணமாக சீனாவுக்கும், வியாட்நாமுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், வியட்நாமில் சீனா, தைவான், தென்கொரியா உள்ளிட்ட நிறுவனங்கள் எண்ணை சுத்திகரிப்பு உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றன. அவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டன.

இதற்கிடையே வியட்நாமில் உள்ள சீன எண்ணை கிணற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. தற்போது இது சீனர்களுக்கு எதிரான பெரும் கலவரமாக மாறியது.எண்ணை கிணறுகளில் பணிபுரியும் சீனர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

எனவே அங்கு பணிபுரியும் சீனர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அதை தொடர்ந்து தனது நாட்டு மக்களை வியட்நாமில் இருந்து சீன அரசு வெளியேற்றி வருகிறது.

விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெளியேற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக