திங்கள், மே 12, 2014

புக்கிட் குளுகோர்: சுயேட்சை வேட்பாளர் "Pariah" என்றதால் அமளி

இன்றைய புக்கிட் குளுகோர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது சுயேட்சை வேட்பாளர் அபு பாக்கர் சிடெக் முகமது சான் பத்திரிகையாளர் சந்திப்பின் போது “Pariah” என்ற வார்த்தையை உச்சரித்ததால் டேவான் ஶ்ரீ பினாங் மண்டபத்தின் வெளியே சண்டை ஏற்பட்டது.

அவர் அவ்வார்த்தையைப் பயன்படுத்தியபோது அங்கு இருந்த சில இந்தியர்கள் அவரை மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொண்டனர். எனினும், ஒரு வழக்கறிஞரான அபு பாக்கர் சிடேக் அவ்வாறு மன்னிப்பு கேட்க மறுத்ததோடு, தாம் சட்டவிரோத பேரணிகளில் ஈடுபடும் ஒரு சில தரப்பினரை மட்டுமே குறிப்பிட்டு அவ்வாறு பேசியதாகவும், ஒட்டுமொத்த இந்தியர்களையும் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், அவர் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததையடுத்து 10 நிமிடங்களுக்கு அந்த இடத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த இந்திய ஊடகவியலாளர் ஒருவர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக