திங்கள், மே 12, 2014

வாரணாசியில் கட்சி சின்னத்தை அணிந்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஜய்ராய் அக்கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்றது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


அஜய்ராய், ராம் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த சட்டையில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. வாக்குச்சாவடிக்குள் கட்சி சின்னங்களை காட்டக் கூடாது என்ற தேர்தல் விதிமுறையை மீறிய அஜய் ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரணாசி தேர்தல் பார்வையாளராக உள்ள பிரவீண்குமார், வாக்குச்சாவடிக்குள் கட்சியின் சின்னத்தை அணிந்து வந்தது குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜய் ராய், வேட்பாளராக எனது சின்னத்தை அணிந்துகொள்ள எனக்கு உரிமை உள்ளது. கைச்சின்னம் எனது இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மோடி சின்னத்தை காட்டினார். ஆனால் சின்னத்தை நான் அணிய மட்டுமே செய்தேன். சட்டையில் கை சின்னம் அணிந்தது தவறு என்று வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருந்தால், நான் அதனை கழற்றியிருப்பேன். பணியில் இருந்தவர்கள் என்னிடம் அதுகுறித்து எதுவும் கூறவில்லை. இதனால் நானும் வாக்களித்து வந்துவிட்டேன். அதோடு வாக்குச்சாவடியில் யாரிடமும் நான் பேசவில்லை. 200 மீட்டர் கடந்த பின்னரே பேசினேன் என்றார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக