ஞாயிறு, மே 11, 2014

கட்சி பலத்தை மீட்டெடுக்க ம.சீ.ச போராடும்: ஒங் கா சுவான்

மே 31-ஆம் தேதி நடைபெறவிருக்கும் புக்கிட் குளுகோர் இடைத்தேர்தலில் ம.சீ.ச தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துப் போட்டியிடாது. அத்தொகுதியில் போட்டியிட்டால் ம.சீ.ச வெற்றி பெறுவதற்கான சாத்தியமும் இருக்காது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த பொதுத்தேர்தலுக்குள் ம.சீ.ச-வை பலமிக்க ஒரு கட்சியாக உருவாக்குவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தப் போவதாக ம.சீ.ச  தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஓங் கா சுவான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் புக்கிட் குளுகோர் தொகுதியில் கர்பால் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டதில் 40,000 வாக்குகள் பெரும்பான்மையை இழக்க நேரிட்டதை ஓங் சுட்டிக்காட்டினார்.
புக்கிட் குளுகோர் தொகுதியில் போட்டியிடாதது கஷ்டமான விஷயம் என்றாலும் தற்போதைக்குக் கட்சி உட்பூசல்களைக் களைவதோடு, அதனை பலப்படுத்துவதும் அவசியம் என்றும் ஒங் கூறினார்.
 கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, பேராக் குவா தெம்பூரோங் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் நாடறிந்த வழக்கறிஞரும், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால் சிங் காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானது. இதனைத் தொடர்ந்து, அத்தொகுதியில் காலஞ்சென்ற கர்பால் சிங்கின் மூன்றாவது மகன்  ராம் கர்பால் போட்டியிடவிருப்பதாக ஜ.செ.க அறிவித்தது. ஆனால் ம.சீ.ச தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து அத்தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.
ம.சீ.ச மலேசிய சீன சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதற்கு அடையாளமாய்  கடந்த பொதுத்தேர்தலில் அக்கட்சி பல தொகுதிகளில் தோல்வியடைந்தது. சீனர்களின் தம் மீதான நம்பிக்கையின்மையை ஏற்று அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை என்றும் ம.சீ.ச அறிவித்திருந்தது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற காஜாங் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ம.சீ.ச உதவித் தலைவர் டத்தின் ஶ்ரீ படுக்கா சியு மெய் ஃபன் பி.கே.ஆர் கட்சியை சேர்ந்த டத்தின் ஶ்ரீ டாக்டர் வான் அசிசாவிடம் பெரும்பான்மை வாக்குகளில் தோல்வியடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக