அரசாங்க விண்ணப்ப பாரங்களில் இனத்தைக் குறிக்கும் பகுதியை அகற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
மாறாக எல்லா இனங்களுக்கும் அவர்களுக்குரிய உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தேசியக் கொள்கைகளிலிருந்து அவர்கள் ஒருபோதும் பின் தங்கிவிடக்கூடாது என்பதற்காகவும் அரசாங்க பாரங்களில் இனத்தைக் குறிக்கும் காலியிடம் நிலைநிறுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
“இனத்தைக் குறிக்கும் காலியிடம் அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை. இது குறித்து அமைச்சரவையில் பேசினோம். ஆனால் அகற்றவேண்டாம் என்றே முடிவெடுத்தோம்” என பேராக், தைப்பிங்கில் அம்னோ வீட்டைத் திறந்து வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவ்வகையில், தவறான தகவலை வெளியிட்டது குறித்து பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஜோசப் எந்துலு பெலாவுன் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட தனது அறிக்கையைத் திருத்தி மன்னிப்புக் கோரும் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக