வியாழன், மே 08, 2014

மேதா பட்கர் ஒரு மாவோயிஸ்ட்: சுப்ரமணியசாமி கருத்து

அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்கக்கூடாது என பிரபல சமூக சேவகரான மேதா பட்கர் தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார்.
பொதுவாக தூக்கு தண்டனை என்பதையே ரத்து செய்ய வேண்டும் என்பது மேதாவின் எண்ணம். தவறான செய்திகளை வெளியிட்டு தன்னை அடிப்படைவாதி என்று கூறி தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி செய்வது சுப்ரமணிய சுவாமி தான். மும்பை வடகிழக்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. 

என்னை மாவோயிஸ்ட் என்று சொன்ன சுப்ரமணியசாமி, முதலில் அதை நிரூபிக்க வேண்டும். அதே சமயம் மாவோயிஸ்டுகள் என்றும் தங்களை மாவோயிஸ்டு என ஒத்துக்கொள்ளமாட்டார்கள். எங்களை பொறுத்தவரை வன்முறை என்பது ஒரு மதிப்பு, அதை ஒரு போதும் தந்திரம் என கூறமுடியாது என்று ஆவேசத்துடன் கூறினார் மேதா பட்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக