புதன், மே 28, 2014

கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட உலகின் வலிமையான சிறுவர்கள்

ரோமானியா நாட்டை சேர்ந்த 9 வயதான குய்லியானோ ஸ்ட்ரோ மற்றும் 7 வயதான க்ளாடியூ ஆகியோர் உலகின் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டவர்கள் என பெயர் பெற்றுள்ளனர். 
கரங்கள் மற்றும் இதயத்தை கட்டுமஸ்தானதாக மாற்ற தினமும்  2 மணி நேரம் அவர்கள் பளு தூக்குதலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இருவரும் பேரும் புகழும் அடைய வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்தையே பிளோரன்ஸ் நகரில் குடியேறச் செய்துவிட்டார் 35 வயதான லூலியன் என்ற இவர்களது தந்தை. 

ஆனால் அவர்களுடைய திட்டத்திற்கு அங்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் மீண்டும் ரொமேனியாவிற்கு திரும்பி தங்கள் தொழிலான பழைய இரும்பு வியாபாரத்தை தொடங்கி உள்ளனர். தற்போது தங்கள் ஜாகையை பிரிட்டனுக்கு மாற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

9 வயதான குய்லியானோ 90 டிகிரி செங்குத்தான புஷ் அப் உள்பட  இரண்டு உலக சாதனை படைத்துள்ளான். கிளாடியூ இவனுக்கு சற்றும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபிப்பது போல் கம்பியில் நின்றுகொண்டு புஷ் அப்பில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறான். இவர்களது சாதனை பயணம் தொடரவேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக