சனி, மே 10, 2014

பாகிஸ்தானில் இரு முறை நிலநடுக்கம்: ஒருவர் பலி 30 பேர் படுகாயம்

மே 9-பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் டவுர் என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.50 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் பலியானதோடு 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 4.5 ரிக்டர் அளவாக பதிவாகியிருக்கும் முதல் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. அதையடுத்து 1 மணி நேரத்திற்கு பின்னர் டவுர் பகுதியின் தென்கிழக்கு பகுதியில் 4.6 அளவாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பொருட்சேதம் உட்பட உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14.7 கிலொ மீட்டர் ஆழத்திலும் மற்றும் இரண்டாவது நிலநடுக்கம் 15.3 மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் திறந்த வெளிகளில் தங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக