பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டு கொலைச் செய்த காங்கிரஸ் கட்சியையும், தேசிய மாநாட்டுக் கட்சியையும் மக்கள் தண்டித்துள்ளனர் என்று அப்ஸல் குருவின் மனைவி தபஸ்ஸும் தெரிவித்தார்.
இதுக்குறித்து அவர் மேலும் கூறியது: ஓட்டிற்காக இரு கட்சிகளும் அப்ஸல் குருவை தூக்கிலிட்டனர். ஆனால், மக்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்தனர்.அப்ஸல் நிரபராதி என்பது கஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல இதர மக்களுக்கும் தெரியும்.
மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவும், கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வும் அப்ஸல் குருவை தூக்கிலிட்டதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள். கஷ்மீரில் வேறு ஏதேனும் கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால் அப்ஸல் குரு தூக்கில் போடப்பட்டிருக்கமாட்டார்.காங்கிரசும், தேசிய மாநாட்டுக் கட்சியும் இனியும் விளைவுகளை சந்திக்கவேண்டியுள்ளது. இவ்வாறு தபஸ்ஸும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக