சனி, மே 10, 2014

முதலிடத்தை பிடித்து சீன வீராங்கனை சாதனை

சர்வதேச டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சீனாவின் ஷூய் பெங், சீனத்தைபேயின் ஹிசை சு–வெய் ஜோடி கலக்கி வருகிறது. கடந்த 12 மாதங்களில் இவர்கள் 7 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளனர். 
இந்த நிலையில் மாட்ரிட் ஓபன் டென்னிசில், அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் இவர்கள் ‘நம்பர் ஒன் ஜோடி’ அந்தஸ்தை அடைந்துள்ளனர். 

நாளை மறுதினம் வெளியிடப்படும் புதிய தரவரிசைப் பட்டியலில் ஹிசை–பெங் ஜோடிக்கு முதலிடம் வழங்கப்படுகிறது. சீன வீராங்கனை ஒருவர் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக