வியாழன், மே 01, 2014

GST எதிர்ப்பு பேரணியில் 20,000 மேற்பட்டோர் பங்கேற்பு

கோலாலம்பூர், மே 1- இன்று  தொழிலாளர் தின பொதுவிடுமுறையன்று தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற  GST எதிர்ப்பு பேரணியில் 20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 95 அரசு சார்பற்ற இயக்கங்களின் கூட்டணியில் நடைபெற்ற இப்பேரணியில் வெளிமாநில மக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

முன்னதாக மதியம் தொடங்கி தலைநகர் ஜாலான் ராஜா லாவுட், கே.எல்.சி.சி, சோகோ, மே பேங்க் கட்டிடம், ஆகிய இடங்களில் கூடிய மக்கள் இரண்டு மணியளவில் டத்தாரான் மெர்டேக்கா நோக்கி நடக்கத் தொடங்கினர்.
போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பலர் குழந்தைகளையும் அழைத்து வந்ததைக் காண முடிந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 2014-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, GST எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி திட்டத்தை ஏப்ரல் 2015-ஆம் ஆண்டு முதல் நாட்டில் அமல்படுத்தப்படவிருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த GST வரியால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு இந்த வரித் திட்டம் அதிக சுமை ஏற்படுத்தும் என கருதப்படுவதால், அரசாங்கம் இவ்வரி தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியபோதும், எதுவும் எடுபடவில்லை.
இந்நிலையில், இன்று நாடளாவிய நிலையில் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு GST எதிர்ப்பு பேரணி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக