வியாழன், மே 01, 2014

பிரிட்டிஷ் பிரதமருக்கு மாம்பழம் வழங்கி நூதன போராட்டம்: ஐரோப்பிய யூனியன் தடைக்கு எதிர்ப்பு

இந்திய மாம்பழத்துக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு அல்போன்ஸா மாம்பழங்களை வழங்கி இந்திய வியாபாரிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பழங்கள், காய் கறிகள் பெட்டியில் பூச்சிகள் இருந்ததாகவும் பூச்சிக் கொல்லி மருந்தும் பயன்படுத்தப்பட் டிருந்ததாகவும் ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து அல்போன்ஸா மாம்பழம் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. வியாழக்கிழமைமுதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

இதைக் கண்டித்து பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கெயித் வாஸ் தலைமையில் பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்குச் சென்ற இந்திய வியாபாரிகள் 2 பெட்டிகளில் அல்போன்ஸா மாம்பழங்களை வழங்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக