லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங் களில் நின்றொளிரும் ஒளியாய் எழுந்த கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ அமெரிக்காவில் உள்ள தனது இல்லத் தில் புதன்கிழமை மரணமடைந்தார். சில நாட்களாகவே அவர் உடல்நலம் குன்றியிருந்தார். அவருக்கு 86 வயது. புதன்கிழமை காலை 8 மணியளவில் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆசிரியையாக, கலைஞராக, களப் போராளியாகப் பன்முகங்களோடு வாழ்ந் தவர் மாயா. சம உரிமை, அமைதிக்கான போராட்டத்தில் எப்போதும் முன்ன ணியில் இருந்தவர்.
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும் என்று பெயரி டப்பட்ட தனது சுயசரிதையின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற மாயா ஏஞ்சலோ ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். இந்த புத்தகம் உள்ளிட்ட ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகளையும் மாயா ஏஞ்சலோ எழுதியிருக்கிறார்.
தனது சுயசரிதையின் மூலம் கறுப்பின மக்களின், ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும் நூலின் முதல் பாகம் அமெரிக்க ஆப்பிரிக்க பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை, அதன் குரூரங்களைப் பேசிய முதல் புத்தகமாகச் சித்தரிக்கப் படுகிறது. இனவெறியால் ஒடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை இலக்கியமும் மன உறுதியும் எப்படி மீட்டெடுக்கின்றன என்பதை விவரிக்கும் புத்தகம் அது.
கறுப்பின இலக்கியத்தின் எழுச்சி யாகவும் கறுப்பினப் பெண்ணிய இலக்கியத்தின் முன்னோடியாகவும் மாயா ஏஞ்சலோவின் படைப்புகள் திகழ்ந் தன.ஏஞ்சலோவின் வாழ்க்கையும் அவர் படைப்புகளும் உலகின் எந்த மூலையிலும் ஒடுக்கப்படும் மனிதர் களின் மீட்சிக்கான உத்வேகத்தைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக