ஞாயிறு, மே 11, 2014

போகோ ஹராமின் பின்னணியில் அமெரிக்காவின் கரங்கள்?

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திச் சென்ற போகோ ஹராம் போராளிகள், அமெரிக்காவின் உருவாக்கம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நைஜீரிய செயற்பாட்டாளர்களும், அரசியல் சிந்தனையாளர்களும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

நாட்டின் வடக்கு பகுதியில் போகோ ஹராம் போராளிகள் நடத்தும் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும், நாட்டில் ஸ்திரத்த்னமையற்ற சூழலை உருவாக்கி ஆக்கிரமிப்பிற்கான முயற்சி நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எரிசக்தி உற்பத்தியில் உலகில் நைஜீரியா 7-வது இடத்தில் உள்ளது.ஆப்பிரிக்காவில் முதல் இடத்தில் உள்ளது.அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதில் நைஜீரியா உலகில் 5-வது இடத்தை வகிக்கிறது.நாட்டின் தெற்கு பகுதியில் தற்போது எரிபொருள் உற்பத்தி நடந்தாலும், வடக்கு பகுதியிலும் பெருமளவில் எரிபொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இங்குதான் போகோ ஹராம் போராளிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.மேலும் 170 மில்லியன் அதாவது 17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியா ஆப்பிக்காவில் அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தையாகும்.நைஜீரியாவின் எரிபொருள் வளம், உற்பத்தி மீது நோட்டமிட்டு அந்நாட்டை மீண்டும் காலனியாதிக்க நாடாக மாற்றும் முயற்சியை போகோ ஹராம் போராளிகள் மூலம் அமெரிக்கா நடத்துவதாக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட மாணவிகளை மீட்க அமெரிக்காவின் உதவியை நாடியுள்ள நைஜீரியா அதிபர், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு நாட்டில் நுழையும்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.2005-ஆம் ஆண்டு போகோ ஹராம் உருவாக்கப்பட்ட காலக்கட்டத்தில் அமெரிக்க இண்டலிஜன்ஸ் தயாரித்த அறிக்கியில் 2015-ஆம் ஆண்டு நைஜீரியா தகர்ந்துபோகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.போகோ ஹராம் தாக்குதல்களின் பின்னால் அமெரிக்கா இருப்பதை உறுதிச் செய்வதே இவ்வறிக்கை என்று செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக