தேர்தலில் 335 இடங் களை பிடித்து ஆட்சி அமைத்த போதிலும், மற்ற கட்சிகளின் ஆதரவை நம்பியே மாநிலங்களவையில் பாஜ இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவை மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 240. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற வேண்டும். அப்போதுதான் அது நடைமுறைக்கு வரும் இப்போது, மக்களவையில் பாஜ அதிக இடங் களை பெற்றாலும் மாநிலங்களவையில் அதற்கு பெரும்பான்மை பலம் இல்லை. பாஜ.வுக்கு தற்போது 46 எம்.பி.க்களும். காங்கிரசுக்கு 68 எம்.பி.க்க ளும் உள்ளனர். மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற 121 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத் தால், பல முக்கிய மசோதாக் களை நிறைவேற்ற விடாமல் பாஜ தடுத்து வந்தது.
மாநிலங்களவையில் கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரசுக்கு 102 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே இருந்ததால், 68 மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்தது.இப்போது, காங்கிரஸ் எதிர்கொண்ட அதே சூழ்நிலையை பாஜ.வும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. மாநிலங்களவையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜ.வுக்கு 61 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள். இதர கட்சிகளின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது. 2015ம் ஆண்டுக்குள் இன்னும் சில மாநிலங்களில் இருந்து காலியாகும் எம்பிக் களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. அது காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் பாஜ. வின் எண்ணிக்கை உயர வாய்ப்பு இல்லை. இதன் காரணமாகவே, கூட்டணி யில் இல்லாத அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவை பாஜ வரவேற்று வருவதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக