புதன், மே 07, 2014

லஹாட் டத்துவில் மீண்டும் சீன நாட்டவர் கடத்தல்

லஹாட் டத்து சிலாம் எனும் இடத்தில் உள்ள மீனவ கம்பத்திலிருந்து சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இவர் Wonderful Terrace Sdn Bhd எனும் தொழிற்சாலையில் மேலாளராகப் பணிபுரிகிறார்.

நேற்று அதிகாலை 2.45 மணியளவில் கடத்தத்தப்பட்ட அவரை ஆயுதமேந்திய கும்பல் தென் பிலிப்பைன்ஸுக்குக் கடத்திச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இது போன்ற கடத்தல் சம்பவம் நிகழ்வது இது இரண்டாவது முறையாகும். ‘
கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி சபா செம்போர்னாவில் உள்ள ஓர் உல்லாச விடுதியிலிருந்து 29 வயது சீன நாட்டு இளம்பெண்ணும், அவ்விடுதி ஊழியரான 40 வயது பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணும் கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் கடத்தப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக