வியாழன், மே 08, 2014

தமிழகத்தில் இன்றும் கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்

வங்க கடலில் இலங்கைக்கு அருகில் கடந்த வாரம் குறைந்த அழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. அந்த குறைந்த அழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி கடல் பகுதியில் வலுப்பெற்று குறைந்த அழுத்த தாழ்வு பகுதியாக மாறியது
இதனால் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 30 சென்டி மீட்டர் மழை பதிவானது.

மணிமுத்தாறு 27, அம்பாசமுத்திரம் 23, சேரன்மகாதேவி 15, கொட்டாரம் 14, வட்டணம் 13, கொள்ளிடம், நாகப்பட்டினம் தலா 11, மைலாடி 10, தென்காசி, நாகர்கோவில், பேச்சிப்பாறை, தூத்துக்குடி தலா 9, பாளையங்கோட்டை, சீர்காழி, பரமகுடி, கரம்பக்குடி, அரவக்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம், சிவகிரி, செங்கோட்டை, பூதப்பாண்டி, பாம்பன் ஆகிய பகுதிகளில் தலா 7, சாத்தான்குளம், கோத்தகிரி, தேன்கனிகோட்டை, உத்தமபாளையம், சங்கரன்கோவில், இரணியல், ஆலங்குடி, அரிமளம் ஆகிய பகுதிகளில் தலா 6, பொள்ளாச்சி, பேராவூரணி தலா 5, ஆற்காடு, ராமநாதபுரம், உடுமலைப்பேட்டை, பழனி, தேவகோட்டை, ராஜபாளையம், லால்குடி தலா 4, ராமேஸ்வரம், பல்லடம், அவினாசி, சிவகங்கை 3 சென்டி மீட்டரும் மழை பதிவானது.

அடுத்த 24 மணிநேரத்தில் அதாவது இன்று (வியாழக்கிழமை) உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும். இதில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்தில் உள்மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். இந்த நிகழ்வு தெற்கு பகுதியில் இருந்தாலும் வங்க கடலில் ஈரம் மிகுந்த காற்று ஈர்ப்பதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப்பரப்பில் கரையை கடந்ததால் புயலாக மாற வாய்ப்பு இல்லை. அக்னி நட்சத்திரம் ஆரம்ப காலத்தில் மழைக்கான நிகழ்வு இருப்பதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. அக்னி நட்சத்திர காலம் முழுவதும் இதே நிலை நீடிக்கும் என்று கூற முடியாது. இந்த நிகழ்வு மாறிய மறுநாளே மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக