கட்சிப் பிரதிநிதிகள் உட்பட மூன்று அமலாக்கக் குழுக்கள் புக்கிட் குளுகோர் இடைத்தேர்தலை கண்காணிக்கும். இந்த அமலாக்கக் குழுவில் இன்ஸ்பெக்டர் தகுதியைக் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியும், பினாங்கு மாநகர மன்ற அதிகாரி ஒருவரும் இடம்பெற்றிருப்பார் என பினாங்கு மாநில தேர்தல் ஆணைய இயக்குனர் அசிசால் அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த ஒவ்வொரு அமலாக்கக் குழுவும் புக்கிட் குளுகோரில் அமைந்துள்ள பாயா தெருபுங், ஆயர் ஈத்தாம் மற்றும் ஶ்ரீ டெலிமா ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் பணியமர்த்தப்படுவார்கள் என அசிசால் அஹ்மாட் தெரிவித்தார்.
“அவர்களின் பணி வேட்புமனு தாக்கல் அன்று தொடங்கும். பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள், பிரச்சாரம் ஆகியவற்றை கவனிப்பார்கள். போட்டியிடும் கட்சிகள் விதிமுறைகளை மீறினால் அமலாக்கக் குழு நடவடிக்கை எடுக்கும்” என அசிசால் அஹ்மாட் தெரிவித்தார்.
நாடறிந்த வழக்கறிஞரும், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால் சிங், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானது. புக்கிட் குளுகோர் தொகுதியில் எதிர்வரும் மே 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் வேளையில் மே 25-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக