வியாழன், மே 01, 2014

ரஷிய ஆயுத கிடங்கில் பயங்கர தீ விபத்து: 10 பேர் சாவு

ரஷியாவில் மாஸ்கோவில் இருந்து 6.200 கி.மீ. தொலைவில், கிழக்கு சைபீரியாவில் போல்ஷயா துரா என்ற கிராமத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளது. 
அதன் அருகில் உள்ள காட்டில் நேற்று திடீரென தீப்பற்றியது. இந்த தீயானது ஆயுதக்கிடங்குக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. 

ஆயுதக்கிடங்கில் தீப்பற்றியதில் வெடிபொருட்கள் வெடித்தன. இதில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இந்த தீ விபத்தின்போது இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். 

அந்த பகுதியை சேர்ந்த ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் பாதுகாப்பு காரணங்களையொட்டி ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக