வியாழன், மே 01, 2014

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி

8 அணிகள் இடையிலான 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும். 
இந்த நிலையில் துபாயில் நடந்த 20–வது லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இது தான் அரபு நாட்டில் நடைபெறும் கடைசி ஐ.பி.எல். போட்டியாகும். இதன் பிறகு எஞ்சிய ஆட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும். 

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதன்படி ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இதன்படி ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் வார்னர் அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்தார். 

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தின் மூலம் ஐதராபாத் அணி 2வது முறையாக வெற்றியை கைப்பற்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக