எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்த மரணத்தண்டனைக் குறித்து சற்றும் பயப்படவில்லை என்று மரணத்தண்டனை விதிக்கப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதீஃ தெரிவித்துள்ளார்.
இவர் உள்பட 683 பேருக்கு கடந்த திங்கள் கிழமை சாதாரண குற்றங்களை சுமத்தி எகிப்திய நீதிமன்றம் அநியாயமாக மரணத்தண்டனை தீர்ப்பை வழங்கியது.
கூட்டு மரணத்தண்டனை தீர்ப்புக்கு பிறகு இன்னொரு வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான முஹம்மது பதீஃ தண்டனை தீர்ப்புக் குறித்து கூறியது:
கொள்கைக்காக தியாகத்தை விரும்பு நான் ஆயிரம் முறை மரணத்தண்டனை விதித்தாலும் சத்தியத்தின் பாதையில் இருந்து பின்வாங்கமாட்டேன்.மரணத்தண்டனை தீர்ப்புக் குறித்து சற்றும் பயப்படவில்லை என்று தெரிவித்தார்.
சர்வதேச சட்ட விதிகளுக்கு முற்றிலும் பொருந்தாத இந்த கொடூர தீர்ப்புக் குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக