புதன், டிசம்பர் 21, 2011

2014ம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக ஓமர் அப்துல்லாவே நீடிப்பார்



இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எதிர்வருகிற 2014ம் ஆண்டு வரை முதல்வராக ஓமர் அப்துல்லாவே நீடிப்பார் என்று தேசிய மாநாட்டு கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.தற்போது முதல்வராக தேசிய
மாநாட்டு கட்சியின் ஓமர் அப்துல்லா பதவி வகிக்கிறார். ஆனால் ஆட்சி அமைக்கும் முன்பு இரு கட்சிகளிடையே சுழற்சி முறையில் அதாவது 30 மாதங்கள் தேசிய மாநாட்டு கட்சியும், அடுத்த 30 மாதங்கள் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைப்பது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் அரசியல் ஆலோசகர் தேவேந்தர்சிங் ராணா கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் சார்பில் முதல்வராக ஓமர் அப்துல்லா தொடர்ந்து 2014ம் ஆண்டு வரை இருப்பார்.மேலும் சுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கு வாய்ப்பில்லை. தற்போது ஓமர் ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 33 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன, 22 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, 8334 கி.மீ. தூரம் சாலைகள் போடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன் மாநிலத்தில் 11 ஆண்டுகளுக்கு பின் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். மக்களும் பயமின்றி வாக்களித்துள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக