இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்திலும் விசாரணை நடந்து வருகின்ற நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த காலித் குரேஷி தலைமையில் முகமது அசார் செளத்ரி, செளத்ரி ஜூல்பிகர் ஆகிய சட்டத்தரனிகள் அடங்கிய நீதித்துறை விசாரணைக் குழுவினர் சனவரி இரண்டாம் வாரத்தில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்திய தூதரகம் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட 9 பயங்கரவாதிகளி்ன் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட விபரம் குறித்து இந்திய வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப் குறித்தும் விசாரணை நடத்தவுள்ளனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக