நாடாளுமன்றத்தில் கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ரூ 103 கோடி ரூபாய் வருமான வரியை கட்டாமல் பாக்கி வைத்து இருப்பதாகவும் 2012 மார்ச் இறுதியில் அதைக் கட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தம் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த ரூ 103 கோடியை வருமானவரித் துறையில்
கணக்கில் செலுத்தாமல் இரு வருடங்களாக பாக்கி வைத்துள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் வெளிவந்தது குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக