செவ்வாய், டிசம்பர் 20, 2011

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமாம் : பீஜேபி


பகவத் கீதையை உடனடியாக தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா குரலெழுப்பியுள்ளது.
இதனை மக்களவை எதிர்கட்சித்தலைவரும், பாஜக முன்னணி தலைவர்களுள் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். "தேசிய நூலாக பகவத் கீதையை அறிவித்து, அதற்கு தடை விதிக்கப்படும்
சூழலை அகற்ற முயல வேண்டும்" என்றும் சுஷ்மா கூறியுள்ளார்.
ரஷ்யாவில் பகவத் கீதையை தடைசெய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அறிந்ததே. இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.இந்த விவகாரத்தில் ரஷ்ய நிர்வாகத்தின் நடவடிக்கை போதுமானதல்ல என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.பகவத் கீதைக்கு தடை விதிக்கப்படும் சூழ்நிலையை அகற்றி அதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

1 கருத்து: