பிலிப்பைன்ஸ் நாட்டில் சில தினங்ககுக்கு முன் வீசிய வெப்பமண்டல புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இப்புயலில் இதுவரை சுமார் 957 பேர் மரணித்துள்ளதாகவும், 49 பேரை காணவில்லை என்றும் அரசாங்கத்தின் பேரழிவு கண்காணிப்பு குழு தனது தற்போதைய தகவலில் தெரிவித்துள்ளது.சுகாதார காரணங்கள் மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க இறந்தவர்களை
கூட்டாக புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.தெற்கு துறைமுக நகரங்களான ககயான்-டி-ஓரோ மற்றும் இலிகான் ஆகிய நகரங்களில் முறையே 579 பேர் மற்றும் 279 பேர் மரணித்துள்ளதாக பேரழிவு மேலாண்மை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிங்கோ அகூய்னோ நிவாரணப் பணிகளை பார்வையிடவும், சேதம் குறித்து ஆய்வு செய்யவும் இந்த இரு நகரங்களுக்கும் இன்று வருகை புரிகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக