செவ்வாய், டிசம்பர் 20, 2011

நிதிச் சுமை ரூபாயின் மதிப்பு குறைவிற்கு காரணம்: இந்திய மைய வங்கி

அதிகரித்துவரும் நிதிப் பற்றாக்குறை, ஏற்றுமதி இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியனவே ரூபாயின் மதிப்பு குறைவிற்கு காரணங்கள் என்று இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் கே.சி.சக்ரவர்த்தி கூறியுள்ளார்.மும்பையில் நடந்த தொழில் முகவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சக்ரவர்த்தி, “இந்த நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகபட்ச அளவை எட்டியுள்ளது
. பணவீக்கம் அதிகரித்துள்ளது, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிதிச் சூழலில் ரூபாயின் மதிப்பு குறைவது தவிர்க்க இயலாதது”என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக