இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவது (விற்பது) என்று ஆஸ்ட்ரேலிய நாட்டு ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி தனது கட்சிக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுத்துள்ளது. நமது நாட்டில் இயங்கிவரும் (உள்ளூர் தயாரிப்பான) அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் போதுமான அளவிற்கு நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை, போதுமான அளவிற்கும் இல்லை என்பதால்தான் அமெரிக்காவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்று ஆரம்பரத்தில் காரணம் சொல்லப்பட்டது. இப்போதுதான் அந்த அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் எல்லாம் அயல் நாடுகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் அணு உலைகளை வாங்கிக் குவிக்கவே என்பது புலனாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா மட்டுமல்ல, அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (Nuclear non - proliferation Treaty - NPT) கையெழுத்திடாத எந்த நாட்டிற்கும் யுரேனியம் விற்பதில்லை என்று உறுதியான முடிவு எடுத்திருந்த ஆஸ்ட்ரேலியா, இன்றைக்கு இந்தியாவின் வற்புறுத்தல் இன்றி (இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவு வேண்டுமானாலும் யுரேனியம் விற்கத் தயார் என்று கூறிவிட்ட நிலையல்) யுரேனியம் விற்க முன்வந்திருப்பது ஏன்?
FILE
ஆனால் அந்நாட்டு அரசு ஒரே வரியில் பதில் கூறியது: இந்தியாவின் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள நினைக்கிறோம் - அவ்வளவே. அதுமட்டுமின்றி, இந்தியாவின் எரி சக்தி தேவை மிக அதிகமானது (இதுநாள் வரை இது தெரியவில்லையா?) என்றும் கூறியது. தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஜூலியா கில்லார்ட் கட்சிக் கூட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று யுரேனியம் விற்கும் முடிவை நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்ற அதிகாரம் பெற்றுக்கொண்டார்.
ஆனால், உண்மைக் காரணம் வேறொன்று என்பதை அங்குள்ள அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக