புதன், டிசம்பர் 21, 2011

80 இலட்சம் கொள்ளை: 11,000 அஜ்மீர் தர்காவில் போட்ட காவலாளி!


தன்னைக் காவலுக்கு அமர்த்திய முதலாளியின் கடையில் 80 இலட்சம் ரூபாய் கொள்ளையடித்து தப்பித்து சென்ற காவலாளியை மும்பை குற்ற பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.மும்பையில் உள்ள ஜாவேரி பஜாரில் உள்ள மத்தேஷ்வரி ஜுவல்லரியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றியவர் தேவ்ராஜ் மிஷ்ரா. தன் முதலாளியுடன் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தால் கோபமுற்ற மிஷ்ரா அவரை பழிவாங்க மத்தேஷ்வரி ஜுவல்லரியில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அங்கு இன்னொரு காவலாளியாக இருந்த அனில் குமார் மிஷ்ராவுக்கு மயக்க மருந்து கலந்த இருமல் மருந்தை கொடுத்து அவரை மயக்கமுற செய்துள்ளார். அவர் மயக்கமுற்ற பின் அக்கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளார்.


கொள்ளையடித்த 80 இலட்சம் மதிப்புள்ள நகைகளை மிஷ்ரா விற்க முயன்றும் யாரும் வாங்க முன் வரவில்லை. சிறிய அளவு நகைகளை மட்டும் விற்றுள்ள மிஷ்ரா 11,000 ரூபாயை அஜ்மீர் தர்காவில் காணிக்கை செய்துள்ளார். பின் தன் காதலியின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள தோட்டத்தில் நகைகளை மறைத்து வைத்துள்ளார்.

மிஷ்ரா விற்றது போக மீதமிருந்த 72 இலட்சம் மதிப்புள்ள 1,550 கிராம் தங்கத்தையும் 11 கிலோ வெள்ளியையும் மீட்ட காவலர்கள் நகை கடை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக