அமெரிக்காவில் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களான மெர்க், கிளாக்சோ-ஸ்மித் கிளைன், பைசர், இலி லில்லி ரான்பாக்ஸி, அப்பாட் ஆகிய நிறுவனங்களின் பல்வேறு முறைகேடுகளுக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டகம் கடும் அபராதங்களை விதித்துள்ளது.
மெர்க் நிறுவனத்தின் வயாக்ஸ் என்ற வலிநிவாரணி 7 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால்
தொடர்ந்து அது கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் மெர்க் நிறுவனத்திற்கு 950மில். டாலர்களை அமெரிக்க அரசு அபராதமாக விதித்துள்ளது.
மற்றொரு பன்னாட்டு நிறுவனமான கிளாக்சோ-ஸ்மித் கிளைன் நிறுவனம் தனது "அவாண்டியா" மற்றும் பிற 9 மருந்துகளை மார்க்கெட் செய்ததில் முறைகேடுகள் செய்ததற்காகவும் விலை மோசடி செய்ததற்காகவும் 3 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கபட்டது.
'பெக்ஸ்ட்ரா' என்ற மருந்தை மார்க்கெட் செய்ததில் மோசடி செய்ததாக ஃபைசர் நிறுவனத்திற்கு 2.3 பில்லியன் டாலர்கள் அபராதம் போடப்பட்டுள்ளது.
அதேபோல் இலி லில்லி ரான்பாக்ஸி நிறுவனம் தனது "சைபிரெக்சா" என்ற மருந்தை அறமற்ற முறையில் விதிகளுக்குப் புறம்பாக விற்றதாக 1.4 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அப்பாட், போரிங்கர், ப்ரான் மெடிகல் ஆகிய நிறுவனங்களுக்கும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக அபராதம் விதிக்கபட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டு, சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட மருந்துகள் சில கள்ளச் சந்தை மூலம் விற்கப்படுவது நடைபெற்று வருகிறது. இந்திய நிறுவனங்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் இந்திய டிரக்ஸ் அன்ட் காஸ்மெடிக்ஸ் சட்டம், 1840, மற்றும் 'டிரக்ஸ் அன்ட் மேஜிக் ரெமெடீஸ் சட்டம், 1955 மற்றும் சில மருத்துவச் சட்டங்களை பல நிறுவனங்கள் மீறி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் கருவளத்தை உருவாக்கும் என்று தவறாக விற்கப்பட்டு வந்த 'லெட்ரோசோல்' என்ற மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னமும் கள்ளச்சந்தையில் புழங்கி வருவதாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய அரசு இதற்கெல்லாம் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை என்று பல்வேறு தரப்புகளிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளன.
மனித உயிர்களுடன் விளையாடும் பன்னாட்டு உள்நாட்டு மருந்து நிறுவனங்கள், கிளினிக்க டிரையல் மையங்கள் மீது அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக