நடந்து வரும் பயங்கர மோதலில், கெய்ரோ ஆராய்ச்சி மையத்தில் இருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அரிய ஆவணங்கள், இதழ்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் தீயில் கருகி உள்ளன. சுமார் ஒரு லட்சத்து 92 ஆயிரம் புத்தகங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் படையெடுப்பின் போது, கெய்ரோவில் நெப்போலியன் நிறுவிய இந்த ஆராய்ச்சி மையத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வரலாற்று ஆவணங்களும் ஏராளமாக இருந்தன. அவையும் தீயில் நாசமாகி உள்ளன. தீயில் கருகியது போக மிஞ்சியுள்ள ஆவணங்களை சேகரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். தாரிர் சதுக்கத்தில் உள்ள இந்த அருங்காட்சியக கட்டிடம் நொறுங்கி தரைமட்டமாகும் நிலையில் உள்ளது.
புதன், டிசம்பர் 21, 2011
எகிப்தில் நடந்த கலவரத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய ஆவணங்கள் தீக்கிரை
நடந்து வரும் பயங்கர மோதலில், கெய்ரோ ஆராய்ச்சி மையத்தில் இருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அரிய ஆவணங்கள், இதழ்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் தீயில் கருகி உள்ளன. சுமார் ஒரு லட்சத்து 92 ஆயிரம் புத்தகங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் படையெடுப்பின் போது, கெய்ரோவில் நெப்போலியன் நிறுவிய இந்த ஆராய்ச்சி மையத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வரலாற்று ஆவணங்களும் ஏராளமாக இருந்தன. அவையும் தீயில் நாசமாகி உள்ளன. தீயில் கருகியது போக மிஞ்சியுள்ள ஆவணங்களை சேகரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். தாரிர் சதுக்கத்தில் உள்ள இந்த அருங்காட்சியக கட்டிடம் நொறுங்கி தரைமட்டமாகும் நிலையில் உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக