நடப்பு நிதியாண்டில் (2011-12) கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் பணம், நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடியில் நகைகளும் அடங்கும். மாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக